கள்ளக்குறிச்சி மாணவியின் ஸ்ரீமதி உடலை பெற பெற்றோர் சம்மதம்.. சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு?1439233554
கள்ளக்குறிச்சி மாணவியின் ஸ்ரீமதி உடலை பெற பெற்றோர் சம்மதம்.. சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு? கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் மாணவியின் தந்தை ராமலிங்கம் மூன்று மருத்துவர்கள் மறுபிரத்தின பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும். தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிறாத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மாணவியின் தந்தை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தது. இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்ப அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்ப...