Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்!

Image
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்!  4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.   அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.   ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் 2ம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க...

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

Image
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!! விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர், மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). திருமணம் ஆனவர். இவர் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்த 22 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதை வீடியோ எடுத்து தனது நண்பர் மாடசாமியிடம் (37) காட்டினார். வீடியோவை தனது செல்போனில் பதிவேற்றம் செய்த மாடசாமி, பெற்றோரிடம் காட்டி விடுவதாக மிரட்டி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் பிரவீன் (22), ஜூனத் அகமது (24) மற்றும் 4 பள்ளி மாணவர்கள் வீடியோவை, வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி தொடர் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்த...