Posts

Showing posts with the label #Passengers | #Magical | #Middle

22 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்!100467637

22 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்! நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. A Tara Air's 9 NAET ரக விமானம் 4 இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பயணிகளுடன் நேபாளத்தின் போக்கரா நகரில் இருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை கிளம்பியது. இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த மற்ற அனைவர்களும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்ட நிலையில் பின்னர் தௌலகிரி மலைக்கு திருப்பி விடப்பட்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை தேடுவதற்காக உள்துறை அமைச்சகம் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. இதோடு ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதிந்திரா மணி தெரிவித்துள்ளார்.