பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு! நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.56, டீசல் விலை ரூ.7.61 உயர்ந்துள்ளன. தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வர்த்தக சிலிண்டரின் விலை புதன்கிழமை 40 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிறிய டீக்கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலிண்டர் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, தேனீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்துள்ளன. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.96க்கும், ஒரு லிட்டர்...