If China invades Taiwan, the US military will be deployed against China to protect Taiwan!-379109572
தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்! டோக்கியோ: ‘தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு நேற்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவத்தை அனுப்புமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அதிபர் பைடன், ``சமீப காலமாக தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவ ரீதியா...