நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!!
நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!! இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பல முக்கிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் செல்வதற்கும், 10ம், 12ம் வகுப்பு 2வது திருப்புதல் தேர்வுகளுக்காக பள்ளிக்குச் செல்லவும் பொதுமக்களும், மாணவர்களும் பேருந்துகள் இயக்கப்படாது கண்டு ஏமாற்றமுடன் காத்திருந்தனர். நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று நடைப்பெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்றும், நாளையும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வருட கடைசி வருமான வரி தாக்கல் செய்வது உட்பட பல வங்கி வேலைகள் இருப்பதால், வங்கி...