Posts

Showing posts with the label #Wholesale | #Crore | #Government | #Decided

அரசு பேருந்து கட்டணம் உயர்வு!

Image
அரசு பேருந்து கட்டணம் உயர்வு! போக்குவரத்து துறைக்கு எண்ணெய் நிறுவனங்களால் மொத்தமாக வழங்கப்பட்டு வந்த டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் மொத்தமாக டீசல் வாங்குவதை தமிழ்நாடு போக்குவரத்து துறை நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 3.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டு சில்லறையாக வாங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எனவே இதன் தேவையை சில்லரை விற்பனை மூலமாக பெறுவது என போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 63 பைசா குறைக்கப்பட்டு டீசல் பெற பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது.    எனவே மொத்தமாக டீசல் வாங்குவதால் தினசரி இழப்பு ஏற்படும் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்களுக்கு கிடைக்கும் விலையை அடிப்படையாக கொண்டு தினசரி சில்லறை முறையில் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானித்துள்ளனர்.