விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!!


விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!!


விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர், மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). திருமணம் ஆனவர். இவர் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்த 22 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதை வீடியோ எடுத்து தனது நண்பர் மாடசாமியிடம் (37) காட்டினார். வீடியோவை தனது செல்போனில் பதிவேற்றம் செய்த மாடசாமி, பெற்றோரிடம் காட்டி விடுவதாக மிரட்டி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பினார்.

இதை பார்த்த அவரது நண்பர்கள் பிரவீன் (22), ஜூனத் அகமது (24) மற்றும் 4 பள்ளி மாணவர்கள் வீடியோவை, வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி தொடர் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 மாணவர்கள் இளம்பெண்ணை தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில்  விருதுநகர் பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை தேவை.பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம்,' என்றார். 

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், 'விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்.60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடுகிறேன்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம்.என்பதை பாருங்கள். வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்.எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்,' என்றார்.

Comments

Popular posts from this blog

Fresh Golden Caramel Hair Color Tones for Ladies in 2020

Peanut Butter Oatmeal Cookies #ButterOatmealCookies

Linguine with Olives amp Shrimp #Shrimp