மணல் குவாரிகள் விரைவில் அமைப்பு அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர்: வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டியில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசின் இசைவு இல்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது என்பதில் ஒன்றிய அரசும் உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பும் தெளிவாக உள்ளது. அதற்கு ஒரு மாநிலம் கீழ்படியாமல் இருப்பது எந்த வகை ஜனநாயகம்? இந்தியாவில் எப்படி ஒருமைப்பாடு நிலவும்? தமிழகத்தில் விரைவில் மணல் குவாரிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Sand Quarries Minister Duraimuruganவிரிவாக படிக்க >>

Comments
Post a Comment