வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில் வாஸ்து நாள் சிறப்பு யாகம்!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது.
மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம்.

Comments
Post a Comment