ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு1188793288
ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு
ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா.
ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் நிகில் சோப்ரா. தொடக்க வீரர்களாக இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் நிகில் சோப்ரா தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. பட்லர் இந்த சீசனில் 863 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களைகுவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
3ம் வரிசையில் சன்ரைசர்ஸ் அணியின் 3ம் வரிசை வீரராக இந்த சீசன் முழுக்க ஜொலித்த ராகுல் திரிபாதியையும், 4ம் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்த நிகில் சோப்ரா, முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
5ம் வரிசையில் டேவிட் மில்லரையும் ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பராக ஆர்சிபியின் மேட்ச் வின்னராக ஜொலித்த தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தார் நிகில். ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலையும் தேர்வு செய்தார்.
ஃபாஸ்ட் பவுலர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.
நிகில் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவன்:
ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.
Comments
Post a Comment