நித்யானந்தா ஐசியூவில் சிகிச்சை? பிடதி சொத்துக்கும் தங்க கட்டிகளுக்கும் குறிவைத்த கும்பல்? பின்னணி 2059887727
நித்யானந்தா ஐசியூவில் சிகிச்சை? பிடதி சொத்துக்கும் தங்க கட்டிகளுக்கும் குறிவைத்த கும்பல்? பின்னணி
டெல்லி: நித்யானந்தாவின் சொத்தை பங்கு போட்டுக் கொள்ளவும், தங்கக் கட்டிகளை கபளீகரம் செய்யவும் ஒரு பெரிய கூட்டம் காத்துக் கொண்டிருப்பதாக புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நக்கீரன் நாளிதழில் கூறப்பட்டுள்ள செய்தியில் "2018 ஆம் ஆண்டு ஆணை பலாத்காரம் செய்தது, பெண்ணை பலாத்காரம் செய்தது (கேட்டால் தான் பெண்தான் அர்த்தநாரீஸ்வரர் என்பது) இந்த வழக்குகளில் 4 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
வனவாட்டா எனும் பகுதியில் கைலாசா எனும் கம்பெனியை ஆரம்பித்து வங்கிக் கணக்கை தொடங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கருடா ஏர்வேஸ் உள்ளது. இந்த ஏர்வேஸில் ஏறினால் கைலாசாவுக்கு
இரு சிறுமிகள்
நித்தியால் கடத்தப்பட்ட இரு சிறுமிகள் மேற்கு இந்திய தீவுகள் நாட்டில் ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர். ஜமைக்காவும் வனவாட்டாவும் வேறு வேறு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது கைலாசா எங்கே இருக்கிறது என தெரியவில்லை. நித்யானந்தா மேற்கு இந்திய தீவுகளில் இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் இவர் கப்பலிலேயே சுற்றி கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
கைலாசாவின் பனிமலைகள்
மேலும் தான் இருக்கும் கைலாசாவில் பனி மலைகள் இருப்பதாக நித்யானந்தாவே கூறுவதால் நேபாளத்தில் பதுங்கியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. நித்யானந்தா நேபாளம் வரை சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கிருந்துதான் அவர் வேறு நாட்டுக்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கெல்லாம் செல்லாம் நேபாளத்திற்கு அருகேயே இவர் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
பிரச்சினை
இல்லாவிட்டால் வெளிநாட்டில் ஏதேனும் பிரச்சினையாகி திரும்பவும் நேபாளத்திற்கே வந்துவிட்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வனவாட்டாவிலும் இல்லை, கரீபியன் தீவுகளிலும் கைலாசா இல்லை என்றால் அது எங்கிருக்கிறது என்ற தகவல்கள் ஏதுமே இல்லை. நித்யானந்தா எந்த உடற்பயிற்சியையும் செய்ய மாட்டார். ஆனால் டயட் கட்டுப்பாட்டில் இருப்பார். இவரது காம களியாட்டத்திற்காக சில மாத்திரைகளை நித்யானந்தா உட்கொண்டிருக்கலாம். தற்போது நித்யானந்தாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவருடைய பல லட்சம் கோடிக்கணக்கான சொத்துகளை யார் நிர்வகிப்பது என்ற பஞ்சாயத்து நடைபெறுகிறது.
மோசமான நிலையில் நித்தி
நித்யானந்தா எங்கோ ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 26ஆம் தேதி இரவு முதல் நித்யானந்தா இறந்துவிட்டார் என வதந்தி கிளம்பியுள்ளது. அதை சீடர்கள் யாரும் இணையதளம் மூலம் மறுக்கவில்லை. மேலும் பிடதி இருந்த போது சம்பாதித்த அனைத்து பணத்தையும் நித்யானந்தா தங்கக் கட்டிகளாக மாற்றிவிட்டார். அந்த தங்கக் கட்டிகளை கபளீகரம் செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது" என அந்த செய்தியில குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment