ஆபாச வீடியோ வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு மீண்டும் சிக்கல் - அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு
ஆபாச வீடியோ வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு மீண்டும் சிக்கல் - அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பணத்திற்கு கஷ்டப்பட்ட சிறிய நடிகைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்தது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மும்பை மலாடு மத் தீவில் உள்ள பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஒரு முறை அவ்வாறு வீடியோ எடுத்த போது போலீஸார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
அவர் ஆபாச வீடியோவை பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்து அங்கிருந்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. வீடியோவை ஹாட்ஷாட் என்ற மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்ய உதவியதாக ராஜ்குந்தராவின் ஐடி பிரிவு தலைவர் ரேயான் என்பவரும் கைது செய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் ராஜ்குந்த்ரா பிரிட்டன் நிறுவனத்திற்கு வீடியோ எடுத்து கொடுத்த நிறுவனத்தை அவரின் மைத்துனர் தான் நடத்தி வந்தார் என்றும் தெரிய வந்தது.
அந்த நிறுவனத்தை ராஜ்குந்த்ரா தான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக மும்பை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இவ்வழக்கில் ராஜ் குந்த்ரா விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ தொடர்பாக வெளிநாடுகளுடன் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.
Comments
Post a Comment