அதிசயமான விஷயம்... மகேஷ் பாபு பாராட்டு... எதுக்காக தெரியுமா
அதிசயமான விஷயம்... மகேஷ் பாபு பாராட்டு... எதுக்காக தெரியுமா
நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக உள்ளார். இவரது படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. இதனால் இவர் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக காணப்படுகிறார். இவரது படங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.
இதன்மூலம் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதுமட்டுமிலலாமல் சர்வதேச அளவிலும் இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க இவர் பெற்றுள்ள ரசிகர்கள் வட்டமே காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து ஹிட் நம்பர்களை இவர் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியானது சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில், படம் கடந்த ஜனவரியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்ற படங்களின் ரிலீஸ், கொரோனா போன்ற காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக மகேஷ் பாபுவிற்கு ஜோடி சேர்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இருவரும் இணைந்து இந்தப் படத்தில் சிறப்பான ஜோடியாக காணப்பட்டனர்.
பாடல்களில் மகேஷ்பாவுவிற்கு இணையாக நடனம் ஆடி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து மகேஷ்பாபு ரசிகர்கள் கீர்த்திக்கும் 35 அடி உயரத்திற்கு கட்அவுட் வைத்தனர். இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆயினும் சர்வதேச அளவில் சில தினங்களிலேயே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படத்தை கீதா கோவிந்தம் வெற்றிப் படத்தை கொடுத்த பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற வியப்பான படத்தை கொடுத்த இயக்குநர் பரசுராம் பெட்லாவிற்கும் சிறப்பான இசையை கொடுத்துள்ள தமனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் பரசுராமும் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளார். மீண்டும் மகேஷ் பாபுவுடன் இணைந்து படத்தை இயக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment