படையப்பா தமிழை விட அந்த மொழியில் தான் பெரிய ஹிட் .! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ரவிக்குமார் சார்.?!
படையப்பா தமிழை விட அந்த மொழியில் தான் பெரிய ஹிட் .! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ரவிக்குமார் சார்.?!
தமிழ் சினிமாவின் ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் என்றால் அது வேறு யாருமல்ல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் எப்போதும் ரசிக்கும் கமர்சியல் படங்களை கொடுத்து சிறுவயது முதல் பெரிய வயது ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் ரவிக்குமார்.
இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் படையப்பா. முதல் படமான முத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்தார்.
படையப்பா திரைப்படத்தின் மூலக்கதை ரஜினிகாந்த் கூறியது. அதனை கே.எஸ்.ரவிக்குமார் பெரிதாக்கி படமாக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் உடன் நடித்து இருப்பார். நீலாம்பரி எனும் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பார். இந்த திரைப்படம் அதற்கு முந்திய தமிழ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது.
இந்த திரைப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். அங்கு நரசிம்மா எனும் பெயரில் ரிலீஸ் ஆனது. இது பற்றி அண்மையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்களேன் –அனல் பறக்கும் கடலை மிட்டாய் வியாபாரம்.! மாறி மாறி கலாய்த்து கொள்ளும் லோகேஷ் – வெங்கட் பிரபு.!
உண்மையில் படையப்பா திரைப்படம் தமிழில் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதோ, அதனைவிட அதிகமாகவே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது என்று கூறினார். அதாவது தெலுங்கில் டப் செய்யப்பட்ட திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வசூலை அந்த திரைப்படம் பெற்றதாம். அதனை கணக்கிட்டு அவர் இவ்வாறு கூறினாராம்.
தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களில் முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படமாக அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment