IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!
IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!
ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான 18 வீரர்களை கொண்ட அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய ஐபிஎல்லில் அசத்திய இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
ரிஷப் பந்திற்கு இந்திய அணியை வழிநடத்தும் திறமை உள்ளது - ரிக்கி பாண்டிங்!
தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 2 சீனியர் வீரர்களும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடியதன் விளைவாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல்லில் சரியாக ஆடாதபோதிலும், அவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபிஎல்லில் தொடர்ச்சியாக கடந்த சில சீசன்களாக அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவரும் ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான தீபக் ஹூடா மற்றும் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசிய ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
Win Big, Make Your Cricket Prediction Now
TAGS KL Rahul Indian Cricket Team IND vs SA
Comments
Post a Comment