என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை விரேந்திர சேவாக், இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளையே மாற்றிப் போட்டவர், தலைகீழாக்கிய போஸ்ட் மாடர்ன் பேட்டர். ஆனால் இவரது கரியர் அப்படியே முடிந்தது, 8503 டெஸ்ட் ரன்களுடன் அவர் முடிந்தார், ஆனால் இந்தியாவின் 5-வது சிறந்த பேட்டர் என்று முடிக்கப்பட்டார். 11 மாதங்களுக்கு என்னை ட்ராப் செய்யாமல் இருந்திருந்தால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்கிறார் சேவாக். 2001- சேவாகின் அறிமுக டெஸ்ட் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது,தென் ஆப்பிரிக்காவில் ப்ளூம்பவுண்ட்டைனில் இவரும் சச்சினும் தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், சேவாக் 105 ரன்கள் எடுத்தார். ஆனால் சேவாக் போன்ற வீரர்களையெல்லாம் பார்மை வைத்து எடைப்போடக்கூடாது, ரவிசாஸ்திரி ஒருமுறை சொன்னது போல் 10 போட்டிகளில் 3 போட்டிகளில் சேவாக் ரன்கள் எடுத்தால் கூட போதும் என்று அணியில் வைத்திருப்பதுதான் எதிரணியின் திட்டங்களையே மாற்றுவதைச் செய்ய முடியும் என்றார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்க...