அதிசயமான விஷயம்... மகேஷ் பாபு பாராட்டு... எதுக்காக தெரியுமா
அதிசயமான விஷயம்... மகேஷ் பாபு பாராட்டு... எதுக்காக தெரியுமா நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக உள்ளார். இவரது படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. இதனால் இவர் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக காணப்படுகிறார். இவரது படங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. இதன்மூலம் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதுமட்டுமிலலாமல் சர்வதேச அளவிலும் இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க இவர் பெற்றுள்ள ரசிகர்கள் வட்டமே காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து ஹிட் நம்பர்களை இவர் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியானது சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில், படம் கடந்த ஜனவரியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்ற படங்களின் ரிலீஸ், கொரோனா போன்ற காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக மகேஷ் பாபுவி...